visitors

Sunday, January 25, 2015

ஓமலூரில் ஒரு மீண்கடை

நேற்று வேலூரிலிருந்து எனது சொந்த ஊருக்கு வந்தேன். ஓமலூரில் ராஜா மீண் கடை ஒன்று உண்டு. நான் சேலம் 7 Arts college ல் படிக்கும்போது 1998, 99, 2000 ஆண்டுகளில்., ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் ஓரு சிறிய மீண் கடை இருக்கும், அங்கே ராஜா அண்ணன் மீண் வருவல் செய்து விற்பார். டேஸ்ட் என்றால் அப்படி ஒரு டேஸ்ட், நாங்கள் நண்பர்களாக சென்று சாப்பிடுவோம்.
அவர் வாடிக்கையாளர்களை வரவேற்க்கும் விதம், என்ன ராஜா வேண்டும் என்று பணிவுடன் கேட்கும் விதம், மீணை எடுத்து சட்டியில் போட்டு பொரிக்கும் பாங்கு (அதில் அவ்வளவு கவணம், வாடிக்கையாளர்களுக்கு தரமானதாக கொடுக்கவேண்டும்  என்ற கரிசணம்) அதை தட்டில் வைத்து கொடுக்கும் விதம், அணைத்தும் இருந்தன. இவை அணைத்தும் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும்.
கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து இப்பொழுது ராஜா அண்ணன் மீண்கடைக்கு செண்றிருந்தேன். முரளி கேப் அருகில் கடை மாற்றப்பட்டிருந்தது. நண்றாக சேர் நாற்காலி போட்டு அமரும்படி வசதியாக மாற்றம்பட்டிருந்தது. ராஜா அண்ணண் இருந்தார், ஆள் உருவத்தில் கொங்சம் மாறி இருந்தார், கொஞ்சம் வயதாகியிருப்பது தெரிந்தது. ஆணால் அண்றுபோலவே அண்புடண் வரவேற்றார், நான் யார் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது. எல்லா கஷ்டமரையும் வரவேற்பது போலவே வரவேற்றார்.
"என்ன சார் சாப்டறீங்க" என்றார். நானும் உருவத்தில் பெரியவனாகவும் டிப் டாப்பாக இருந்ததால் அப்படி அழைத்தார், அப்பொழுது போல் சிறியவனாக இருந்திருந்தால் நிச்சயம் ராஜா என்றே அழைத்திருப்பார்.
"கால் கிலொ சில்லி" நான்.
உக்காருங்கள் என்றவர், ஒரு பையனிடம் கால் கிலொ சில்லி என்றார். புதிதாக ஒரு இளைஞன் சட்டியில் வருத்தெடுத்தார்.
அப்பொழுதெல்லாம் ராஜா அண்ணனோ அல்லது அவரது இரு மகன்களில் ஒருவரோ பொரிப்பார்கள். இப்பொழுது அவர்கள் வேலையில் சேர்ந்து செட்டில் ஆகியிருப்பார்கள் என்று நிணைத்துகொண்டேன். அப்பொழுது அவர்கள் பொறியியல் படித்துகொண்டிருந்தார்கள். மாலையில் கடையில் வேலை செய்வார்கள்.
நான் இவ்வாறு நிணைவில் இருக்க திடீரென ஒரு கார் வந்து நின்றது, அதிலிருந்து ஒருவர் வந்து கால் கிலோ சில்லி வேண்டும் என்க, ராஜா அண்ணன் "கஷ்டமர் வெயிட்டிங், சட்று நேரம் பொருங்கள்" என்றவர், எனக்கு பரிமாரினார். அவரும் காத்திருந்து வாங்கி சென்றார்.
ராஜா அண்ணன் எப்பொழுதும் ப்ரஷ்ஸாக கொடுக்கவேண்டும் என்று நிணைப்பவர். பலபேர் ஏற்கனவே பொறித்து வைத்து அதை மீண்டும் பொறித்து கொடுப்பர்.
நான் சாப்பிட ஆரம்பித்தேன், அப்பா அதே ருசி. சாப்பிட்டு முடிக்கும்வரை அண்ணனே வந்து தண்ணீர் வைப்பது, அருகில் வந்து வேறு ஏதாவது வேண்டுமா எண்பது எல்லாம் அந்த பழைய அண்ணனே.
சாப்பிட்டு முடித்க்கும்போது, என்னை அறிமுகபடுத்திகொண்டு, தம்பிகள் என்ன செய்பிறார்கள் என்று கேட்டேன், ஒருவர் செண்ணையிலும், ஒருவர் ஒசூரிலும் செட்டில் ஆயிட்டதாக சொண்னார்.
ஓமலூரில் நிறைய மாறிவிட்டது, நிறையபேர் மாறிட்டாங்க, மாறாதவர்களில் நீங்களும், உங்க கடை ருசியும் என்றேன். எல்லாம் வரும் போகும் மணிதர்களை இழந்துட்டா பெற முடியாது ராஜா என்றார்.
மறுபடி ராஜா என்ற வார்த்தையை கேட்டவுடன் எனக்கே ஒரு சந்தோசம்.
வர்ரன்னே என்று கிளம்பினேன்.
மீண்டும் ஊருக்கு வந்தா கடைக்கு வாங்க என்றார், 

1 comment: