visitors

Monday, April 22, 2013

இன்று புத்தக தினம்

இன்று புத்தக தினம். இதனை ஒரு தீபாவளியை போல், புத்தாண்டை போல் கொண்டடவெண்டிய தினம். என் மாணவர்களிடம் அதிகமாக வலியுறுத்துவதே வாசிப்பு கலையைத்தான். புத்தகங்களும், பூமியும், இயற்கையும் ஒன்றுதான்.இவை அனைத்தும் விலைமதிப்பற்றது. புத்தகங்கள் என்பது அலமாரியில் உள்ள குழந்தைகள், அவர்களை கையில் எடுத்து கொஞ்சி பாருங்கள், அவர்களுடன் பேசுங்கள், விளையாடுங்கள், அவர்களுடன் உணவருந்துங்கள், தேநீர் அருந்துங்கள், தூங்குங்கள். வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனை புதுனற்சியுடன் வைத்திருக்கும். வாழ்கையில் அணைத்து கஷ்டங்களுக்கும் தீர்வுகள் புத்தகங்களே. புத்தகம் வாசிப்பது என்பது உங்களின் பெரிய சொத்து. உங்களுக்கு பிடிதமானவர்களுக்கு நீங்கள் செய்யும் மிகபெரிய செயல்/ விட்டுசெல்லும் சொத்து  அவர்களிடம் வாசிப்பு கலையை ஏற்படுத்துவதுதான். குழந்தைகளிடம் வாசிப்பு கலையை உருவாக்க நீங்கள் அவர்கள் முன்பாக அதிக நேரம் வாசியுங்கள். இரவு தூங்க செல்லும் முன் குறைந்தபட்சம் இரண்டு பக்கங்களையாவது படியுங்கள். இரவு உணவருந்துவடுபோல இரவு வாசிப்பிற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். ஒரு பெரிய பிரச்சனையை எதிர் கொள்ளும் போது அதிக நேரம் புத்தகத்துடன் செலவழியுங்கள். பிரச்சினை தீர்ந்துவிடும், உதரணமாக ஜென், ஓஷோ, ஷேக்ஸ்பியர், தன்னம்பிக்கை  படியுங்கள்.எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், இலக்கியங்களும்  , புத்தகங்களும் இல்லையென்றால் நான் இல்லை.  அன்புடன், சிவகிரி- 9751153208

No comments:

Post a Comment