visitors

Tuesday, April 29, 2014

admission visit

இன்று நான் admision சம்பந்தமாக என் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தேன்.  ஒரு மாணவனை அழைத்துக்கொண்டு மற்றொரு மாணவன் வீட்டுக்கு சென்றோம். காலை 6 மணிக்கே கிளம்பிட்டேன். அங்கே மாணவன் இல்லை, அவனது தோட்டத்துக்கு சென்றோம். அங்கே அவனது தந்தையும் தாயும் தோட்டத்தில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னை வரவேற்றவிதமே வித்தியாசமாக இருந்தது. கோடுவாலை நீட்டி ஸார் வாங்க வாங்க என்றார், எனக்கு என்னவோ போல இருந்தது.
சரி admission பத்தி பேசுவோம் என்று ஸார் நான் ஒரு கல்லூரியில் இருந்து வர்றேன், உங்க பையன் +2 க்கு பிறகு எங்கள் கல்லூரியில் சேருங்கள் என்று சொல்லி, ஃபீஸ் டீடேல்ஸ் எல்லாம் சொன்னேன். பிறகுதான் தெரிந்தது அவன் ஊரில் இல்லை வெளியூர் போய்விட்டான் என்று. போனாலும் பரவாயில்லை வீட்டிலிருந்து பணத்ைவேறு எடுத்து சென்றுவிட்டானாம். என்னை பங்சசயத்து பண்ண சொல்லிவிட்டார்கள். ஸார் என் பையனை கண்டிப்பாக உங்கள் காலெஜிலயே சேக்கிறோம் அவனை சீக்கிரம் வீட்டுக்கு வரசொல்லுங்க ஸார் என்றார். அவனுக்கு போன் பண்ணினால் அவன் நான் அங்கெல்லாம் வரமுடியாது என் தாதா வீட்லயே இருந்திடறேன் என்கிறான். காலேஜிக்கு போன் பண்ணினால் எப்படியோ அட்மிசன் புதியுங்கள் என்கிறார்கள். நானும் முடிந்தவரை பையனிடமும், அவனது தந்தையிடமும் பேசி, ஒருவழியாக அட்மிசனே வேண்டாம் ஆளைவிடுங்கடா சாமி என்று தப்பி வந்தேன். என்ன பன்றதுன்னே தெரியல, ஒருவழியா சரிங்க நான் கிளம்பறேன் என்றேன். அவனது தந்தை ஸார் அவன் வதவுடன் நானே கூட்டிக்கிட்டு வர்றேன் போங்க என்றார்.கும்பிடு போட்டு கிளம்பினேன்.

No comments:

Post a Comment