visitors

Monday, April 28, 2014

குழந்தைகளின் வழியே பயணிக்கும் கதைகள்

இன்று அலுவலகம் கிளம்ப டூ வீலர்ஐ ஸ்டார்ட் செய்யும்போது கவனித்த ஒன்று.
எனது மகன் வயது மூன்று, அவனது தோழி வயது ஆறு அல்லது ஏழு இருக்கும், இருவரும் என் வீட்டருகில் இருக்கும் ஒரு பனை மரத்தில் இருந்த ஒரு ஓனானை கல்லால் அடித்துக்கொண்டிருந்தனர். நான் அவனிடம் டேய் ஓனானை அடிக்காதே அது பாவம் என்று சொன்னேன். அதற்க்கு அவனது தோழி இல்ல மாமா இது புள்ளையாருக்கு ஒண்ணுக்கு விட்டு கொடுத்துச்சாம் அதனாலதான் அடிக்கிறோம் என்று சொன்னாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த கதையை அவர்களுக்கு சொன்னது யார் ?. ஏனென்றால் நாமும் இதை முப்பது வருடங்களுக்கு முன்னால் செய்திருக்கிறோம். அப்பொழுதும் இதே கதையை காரணமாக சொல்லி இருக்கிறோம். அப்பொழுது இந்த கதையை நம்மிடம் சொன்னது யார்? தெளிவாக இவர்தான் சொன்னார் என்று யாருக்காவது சொல்ல தெரியுமா?
என்ன நாமும் நம்மை விட இரண்டு மூன்று வயது மூத்தவருடன் விளையாடிக்கொண்டிருந்திருப்போம். அப்பொழுது அவர் வேறு யாருக்கோ காரணம் சொல்லியிருப்பார் அதை பார்த்து கதையை தெரிந்திருப்போம்.
என் மகனுக்கு மூன்று வயது அவனால் காரணம் சொல்ல தெரியவில்லை. அவனைவிட மூன்று வயது மூத்தவள் சொல்கிறாள். இன்னும் மூன்று வயது கழித்து என் மகன் இதே கதையை காரணமாக சொல்வான். அப்பொழுது இவன் அருகில் இவனைவிட இரண்டு அல்லது மூன்று வயது சிறுவன் இவன் அருகில் இருப்பான். so கதைகள் இப்படிதான் காலங்களை கடந்து மணங்களை கடந்து செல்கின்றன என்பதை இன்றுதான் நான் தெரிந்துகொண்டேன்.

No comments:

Post a Comment