visitors

Saturday, July 27, 2019

புத்தகங்களும் விமர்சனமும்

இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகம் வாங்க வேண்டுமென்றால் ஈஸியாக வாங்கி விடலாம். புத்தகத்தை தேர்ந்தெடுப்பதற்கும் ஈசியான வழி முறைகள் எல்லாம் வந்துவிட்டன. இந்த எழுத்தாளர், மையக்கரு, புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கூடிய வாழ்க்கை முறை, எழுதப்பட்டுள்ள மொழிநடை இப்படி நிறைய தகவல்களையும், விமர்சனங்களையும் படித்துவிட்டு புத்தகத்தை ஈஸியாக தேர்ந்தெடுத்து விடலாம்.

ஆனால் கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்படி கிடையாது. நான் சொல்வது 1998- 99 காலகட்டம், அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகம் படிக்கவேண்டும் என்றால் ஓமலூரில் உள்ள நூலகம்தான் செல்லவேண்டும். சனி, ஞாயிறு விடுமுறை என்றால் காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்து ரெடியாகி, சைக்கிள் எடுத்துட்டு ஓமலூர் கிளம்பிடுவேன். இங்கிருந்து ஓமலூருக்கு சுமார் 8 கவரைக்கும் போகணும். அன்று மதியம்வரை அங்கேயே ஏதாவது சிறுகதை அல்லது சிறுசிறு புத்தகங்களை படித்துவிட்டு அந்த வாரத்திற்க்கு தேவையான 3 புத்தகங்களை எடுத்துக்கொன்டு வருவேன். அந்த வாரத்தில் கல்லூரி செல்வது, நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றியதுபோக மீதி நேரத்தில் படித்துவிடுவேன். மேலும் எனது பக்கத்து காட்டை சேர்ந்த ஓட்டகாத மாமன், தோழி எல்லோரும் இரவல் பெற்று படித்துவிடுவர். சில நேரங்களில் இரண்டு வாரம் கழித்துகூட திருப்பி ஒப்படைப்பதுண்டு. ஒரு புத்தகத்திற்க்கு 50பைசா தாமத கட்டனத்துடன்.
புத்தகங்கள் என்றால் இப்பொழுதுபோல எழுத்தாளர்களை வைத்து தேர்வுசெய்வதில்லை. ஏதாவது ஒரு புத்தகம் காதல் தலைப்பில் இருந்தால் எடுத்துவிடுவது.
புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள இன்னொரு முறை அதாவது புத்தகத்தின் பின்புறமுள்ள கருத்தை படித்து தேர்வு செய்வது. புத்தகங்களின் பின்புறம் இரண்டு காகிதங்கள் இருக்கும், அச்சிடப்படாத வெற்றுத்தாள்கள். நமக்கு முன்பு படித்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை அதில் எழுதி கையொப்பமிட்டிருப்பார்கள். அந்த கருத்துக்ளை வைத்தே புத்தகத்தை தேர்வுசெய்வோம். நாமும் படித்துவிட்டு நம் கருத்தையும், விமர்ச்சனத்தையும் பதிவிடலாம்.
புத்தகங்கள்தான் என்னை உருவாக்கின. என்னதான் ஏழ்மை நிலை, சாப்பாட்டிற்கே வருமை என்றிருந்தாலும்கூட, எல்லோரும் முன்னேறிவிடுவதில்லை. எனக்கெல்லாம் முன்னேற குறைவான வாய்ப்புகளே கிடைத்தன. அதனை பற்றிக்கொன்டேன். கெட்டுப்போக, தடம்மாறிபோக, நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அப்பொழுதெல்லாம் என்னை காப்பாற்றியது இந்த வாசிப்பும், புத்தகங்களும் மட்டுமே. எனது அப்பா அம்மா எனக்கு அறிவுரை சொன்னதைவிட புத்தகங்கள் எனக்கு சொன்னதே அதிகம். இருந்தாலும் எனது அப்பா மிகப்பெரிய புத்தகம். எழுதப்படாத புத்தகம். அந்த புத்தகம் எனக்குமட்டுமே கிடைத்ததில் இயற்க்கைக்கு நன்றி சொல்கிறேன்.
வறுமையிலும், சாப்பிடாமல்கூட புத்தகத்தை மட்டுமே படித்துக்கொன்டிருந்திருக்கிறேன். பருத்திக்காட்டிலும், வாய்க்கால்களிலும், வயல்மேட்டிலும் படித்துக்கொன்டிருந்திருக்கிறேன். படித்து அழுதிருக்கிறேன். வரப்பில் இரு பக்கமும் மாடு மேய்ந்துகொன்டிருக்கும், நான் மட்டும் நடுவில் அமர்ந்து படித்துக்கொன்டும், அழுதுகொன்ட்டும் இருந்திருக்கிறேன்.
எனது அப்பா இன்றும் கைரேகைதான் வைக்கிறார். நான் முனைவர்.
வாழ்வில் புத்தகத்தின் பங்கு மிகமிக அதிகம். இதனை உணராதவர்களே வாழ்க்கை கஷ்டம் என்றும், கவலையென்றும் புலம்புபவர்

No comments:

Post a Comment