visitors

Saturday, July 27, 2019

புத்தகங்களும் விமர்சனமும்

இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகம் வாங்க வேண்டுமென்றால் ஈஸியாக வாங்கி விடலாம். புத்தகத்தை தேர்ந்தெடுப்பதற்கும் ஈசியான வழி முறைகள் எல்லாம் வந்துவிட்டன. இந்த எழுத்தாளர், மையக்கரு, புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கூடிய வாழ்க்கை முறை, எழுதப்பட்டுள்ள மொழிநடை இப்படி நிறைய தகவல்களையும், விமர்சனங்களையும் படித்துவிட்டு புத்தகத்தை ஈஸியாக தேர்ந்தெடுத்து விடலாம்.

ஆனால் கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்படி கிடையாது. நான் சொல்வது 1998- 99 காலகட்டம், அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகம் படிக்கவேண்டும் என்றால் ஓமலூரில் உள்ள நூலகம்தான் செல்லவேண்டும். சனி, ஞாயிறு விடுமுறை என்றால் காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்து ரெடியாகி, சைக்கிள் எடுத்துட்டு ஓமலூர் கிளம்பிடுவேன். இங்கிருந்து ஓமலூருக்கு சுமார் 8 கவரைக்கும் போகணும். அன்று மதியம்வரை அங்கேயே ஏதாவது சிறுகதை அல்லது சிறுசிறு புத்தகங்களை படித்துவிட்டு அந்த வாரத்திற்க்கு தேவையான 3 புத்தகங்களை எடுத்துக்கொன்டு வருவேன். அந்த வாரத்தில் கல்லூரி செல்வது, நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றியதுபோக மீதி நேரத்தில் படித்துவிடுவேன். மேலும் எனது பக்கத்து காட்டை சேர்ந்த ஓட்டகாத மாமன், தோழி எல்லோரும் இரவல் பெற்று படித்துவிடுவர். சில நேரங்களில் இரண்டு வாரம் கழித்துகூட திருப்பி ஒப்படைப்பதுண்டு. ஒரு புத்தகத்திற்க்கு 50பைசா தாமத கட்டனத்துடன்.
புத்தகங்கள் என்றால் இப்பொழுதுபோல எழுத்தாளர்களை வைத்து தேர்வுசெய்வதில்லை. ஏதாவது ஒரு புத்தகம் காதல் தலைப்பில் இருந்தால் எடுத்துவிடுவது.
புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள இன்னொரு முறை அதாவது புத்தகத்தின் பின்புறமுள்ள கருத்தை படித்து தேர்வு செய்வது. புத்தகங்களின் பின்புறம் இரண்டு காகிதங்கள் இருக்கும், அச்சிடப்படாத வெற்றுத்தாள்கள். நமக்கு முன்பு படித்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை அதில் எழுதி கையொப்பமிட்டிருப்பார்கள். அந்த கருத்துக்ளை வைத்தே புத்தகத்தை தேர்வுசெய்வோம். நாமும் படித்துவிட்டு நம் கருத்தையும், விமர்ச்சனத்தையும் பதிவிடலாம்.
புத்தகங்கள்தான் என்னை உருவாக்கின. என்னதான் ஏழ்மை நிலை, சாப்பாட்டிற்கே வருமை என்றிருந்தாலும்கூட, எல்லோரும் முன்னேறிவிடுவதில்லை. எனக்கெல்லாம் முன்னேற குறைவான வாய்ப்புகளே கிடைத்தன. அதனை பற்றிக்கொன்டேன். கெட்டுப்போக, தடம்மாறிபோக, நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அப்பொழுதெல்லாம் என்னை காப்பாற்றியது இந்த வாசிப்பும், புத்தகங்களும் மட்டுமே. எனது அப்பா அம்மா எனக்கு அறிவுரை சொன்னதைவிட புத்தகங்கள் எனக்கு சொன்னதே அதிகம். இருந்தாலும் எனது அப்பா மிகப்பெரிய புத்தகம். எழுதப்படாத புத்தகம். அந்த புத்தகம் எனக்குமட்டுமே கிடைத்ததில் இயற்க்கைக்கு நன்றி சொல்கிறேன்.
வறுமையிலும், சாப்பிடாமல்கூட புத்தகத்தை மட்டுமே படித்துக்கொன்டிருந்திருக்கிறேன். பருத்திக்காட்டிலும், வாய்க்கால்களிலும், வயல்மேட்டிலும் படித்துக்கொன்டிருந்திருக்கிறேன். படித்து அழுதிருக்கிறேன். வரப்பில் இரு பக்கமும் மாடு மேய்ந்துகொன்டிருக்கும், நான் மட்டும் நடுவில் அமர்ந்து படித்துக்கொன்டும், அழுதுகொன்ட்டும் இருந்திருக்கிறேன்.
எனது அப்பா இன்றும் கைரேகைதான் வைக்கிறார். நான் முனைவர்.
வாழ்வில் புத்தகத்தின் பங்கு மிகமிக அதிகம். இதனை உணராதவர்களே வாழ்க்கை கஷ்டம் என்றும், கவலையென்றும் புலம்புபவர்

Sunday, January 25, 2015

ஓமலூரில் ஒரு மீண்கடை

நேற்று வேலூரிலிருந்து எனது சொந்த ஊருக்கு வந்தேன். ஓமலூரில் ராஜா மீண் கடை ஒன்று உண்டு. நான் சேலம் 7 Arts college ல் படிக்கும்போது 1998, 99, 2000 ஆண்டுகளில்., ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் ஓரு சிறிய மீண் கடை இருக்கும், அங்கே ராஜா அண்ணன் மீண் வருவல் செய்து விற்பார். டேஸ்ட் என்றால் அப்படி ஒரு டேஸ்ட், நாங்கள் நண்பர்களாக சென்று சாப்பிடுவோம்.
அவர் வாடிக்கையாளர்களை வரவேற்க்கும் விதம், என்ன ராஜா வேண்டும் என்று பணிவுடன் கேட்கும் விதம், மீணை எடுத்து சட்டியில் போட்டு பொரிக்கும் பாங்கு (அதில் அவ்வளவு கவணம், வாடிக்கையாளர்களுக்கு தரமானதாக கொடுக்கவேண்டும்  என்ற கரிசணம்) அதை தட்டில் வைத்து கொடுக்கும் விதம், அணைத்தும் இருந்தன. இவை அணைத்தும் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும்.
கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து இப்பொழுது ராஜா அண்ணன் மீண்கடைக்கு செண்றிருந்தேன். முரளி கேப் அருகில் கடை மாற்றப்பட்டிருந்தது. நண்றாக சேர் நாற்காலி போட்டு அமரும்படி வசதியாக மாற்றம்பட்டிருந்தது. ராஜா அண்ணண் இருந்தார், ஆள் உருவத்தில் கொங்சம் மாறி இருந்தார், கொஞ்சம் வயதாகியிருப்பது தெரிந்தது. ஆணால் அண்றுபோலவே அண்புடண் வரவேற்றார், நான் யார் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது. எல்லா கஷ்டமரையும் வரவேற்பது போலவே வரவேற்றார்.
"என்ன சார் சாப்டறீங்க" என்றார். நானும் உருவத்தில் பெரியவனாகவும் டிப் டாப்பாக இருந்ததால் அப்படி அழைத்தார், அப்பொழுது போல் சிறியவனாக இருந்திருந்தால் நிச்சயம் ராஜா என்றே அழைத்திருப்பார்.
"கால் கிலொ சில்லி" நான்.
உக்காருங்கள் என்றவர், ஒரு பையனிடம் கால் கிலொ சில்லி என்றார். புதிதாக ஒரு இளைஞன் சட்டியில் வருத்தெடுத்தார்.
அப்பொழுதெல்லாம் ராஜா அண்ணனோ அல்லது அவரது இரு மகன்களில் ஒருவரோ பொரிப்பார்கள். இப்பொழுது அவர்கள் வேலையில் சேர்ந்து செட்டில் ஆகியிருப்பார்கள் என்று நிணைத்துகொண்டேன். அப்பொழுது அவர்கள் பொறியியல் படித்துகொண்டிருந்தார்கள். மாலையில் கடையில் வேலை செய்வார்கள்.
நான் இவ்வாறு நிணைவில் இருக்க திடீரென ஒரு கார் வந்து நின்றது, அதிலிருந்து ஒருவர் வந்து கால் கிலோ சில்லி வேண்டும் என்க, ராஜா அண்ணன் "கஷ்டமர் வெயிட்டிங், சட்று நேரம் பொருங்கள்" என்றவர், எனக்கு பரிமாரினார். அவரும் காத்திருந்து வாங்கி சென்றார்.
ராஜா அண்ணன் எப்பொழுதும் ப்ரஷ்ஸாக கொடுக்கவேண்டும் என்று நிணைப்பவர். பலபேர் ஏற்கனவே பொறித்து வைத்து அதை மீண்டும் பொறித்து கொடுப்பர்.
நான் சாப்பிட ஆரம்பித்தேன், அப்பா அதே ருசி. சாப்பிட்டு முடிக்கும்வரை அண்ணனே வந்து தண்ணீர் வைப்பது, அருகில் வந்து வேறு ஏதாவது வேண்டுமா எண்பது எல்லாம் அந்த பழைய அண்ணனே.
சாப்பிட்டு முடித்க்கும்போது, என்னை அறிமுகபடுத்திகொண்டு, தம்பிகள் என்ன செய்பிறார்கள் என்று கேட்டேன், ஒருவர் செண்ணையிலும், ஒருவர் ஒசூரிலும் செட்டில் ஆயிட்டதாக சொண்னார்.
ஓமலூரில் நிறைய மாறிவிட்டது, நிறையபேர் மாறிட்டாங்க, மாறாதவர்களில் நீங்களும், உங்க கடை ருசியும் என்றேன். எல்லாம் வரும் போகும் மணிதர்களை இழந்துட்டா பெற முடியாது ராஜா என்றார்.
மறுபடி ராஜா என்ற வார்த்தையை கேட்டவுடன் எனக்கே ஒரு சந்தோசம்.
வர்ரன்னே என்று கிளம்பினேன்.
மீண்டும் ஊருக்கு வந்தா கடைக்கு வாங்க என்றார், 

Saturday, January 17, 2015

நான் தர்மபுரிக்கு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். பேருந்து தொப்பூர் மலை வழியாக சென்றுகொண்டிருந்தது. பேருந்து மெதுவாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. எப்பொழுதுமே தொப்பூர் மலைப்பாதையில் அதிகம் விபத்துக்கள் நடப்பதுண்டு. இந்த ஏரியாவிலேயே விபத்திற்கு பேர் போன இடம் தொப்பூர். பேருந்துகள் மலை ஏறும்போதும் சரி இறங்கும்போதும் சரி, மெதுவாக அட்டைப்பூச்சி ஊர்வதுபோல ஊர்ந்துசெல்லும். அன்று நான்  பேருந்து தனியார் பேருந்து, எனவே  வேகமாக (அதிகபட்சமாக 15 கிலோமீட்டர் வேகம் இருக்கும்) மலை ஏறியது. அப்பொழுது ஒரு  லாரியை    முந்தி சென்றது. அந்த சமயம் ஒரு கனரக வாகணம் ஊர்ந்து செண்றது. அதன் ஓட்டுர், பாவம் அவரை பபார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஒரு கையில் பீடி, ஒரு கையில் ஷ்டேரிங். முகத்தில் அப்படி ஒரு களைப்பு, பபாதி தூக்கம், ஏதோ வாழ்க்கையில் அடிபட்ட ஒரு வடு. அவ்வளவும் தெரிந்தது. வயது 50ஐ தான்டியிருபார்.
அதன்பிறகு எந்தஒரு ட்ரைவரை பார்தாலும் குடும்பத்திற்காக அவர் படும் உழைப்பே கண்முண் தெரிகிறது. அவர்மேல் ஒரு மரியாதை பிறக்கிறது. 

மகணும் பலூணும்

பச்சை கலரில்
ஒரு பலூண்

ஒரு  பலூனில்
இவ்வளவு ஜாலங்களா?

என் மகனுக்கு
ஒரே ஆச்சர்யம்...

எப்படி பலூண்
கைபட்டவுடன் மேலே செல்கிது...

அது ஒரு உணர்வு

பலூண் கையில் பட்டதா
இல்லையா...

படாமலேயே
எப்படி மேலே செல்கிறது...

என் மகனுடன்
விளையாடுகிறது
கிச்சு கிச்சு மூட்டுகிறது
சந்தோசபடுத்துகிறது
கோபப்படுத்துகிறது
சாந்தப்படுத்துகிறது
சீண்டுகிறது
கிளர்ச்சியூட்டுகிறது...

அவன் ராஜாவாக
அது அடிமையாக...

அது ராஜாவாக
அவன் அடிமையாக...

ஒரு எஜமானை
பிண்தொடரும் நாயைப்போல
அவனும்  பலூனும்
மாறி மாறி...

சட்றுநேர ஓய்வு...

அவன் பலூணுக்கும்
பலூண் அவனுக்கும்...

இரு குழந்தைகளின்
விளையாட்டு...

ஆம்
இரண்டும் குழந்தைகளே...

அவனுடன் விளையாடும்போது
பலூணும் ஒரு குழந்தையே...
எனக்கும்
அவனைபோலவே...

28/12/2014.   10:37am

Friday, September 5, 2014

 அரசு பணியில்

நான் இந்த வாரம்
(01.09.2014) அன்று முதுகலை பட்டதாரி ஆசிரியராக திருப்பத்தூர் அருகே உள்ள புதுபேட்டைஅரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்தேன். 

Monday, August 18, 2014

நண்பர் ஜோஷ்

எங்கள் வீட்டு நாய் நேற்று (16.08.2014) இறந்துவிட்டது. எனக்கு அருகில் இருந்த நண்பர்களில், எனக்கு அதிகம் பிடித்த நண்பர்களில் இந்த ஜோஷ் ம் ஒருவன். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் என்னுடன் இருந்தவன். என்னை அதிகம் நான்றாக புரிந்துகொண்டவன்.

பத்து வருடங்களுக்கு முன்புவரை எனக்கு அதிகம் பிடித்தது தினமும் காலையில் அவனுடன் வாக்கிங் போவதுவும் ஓன்று.

 எங்கள் ஊரில் ஓர் பெரிய ஏரி இருக்கிறது. எங்கள் ஊரின் பெயர் பெரியேரிபட்டி, காரணம் அந்த ஏரிதான். கிட்டத்தட்ட 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது எங்கள் ஏரி. சுற்று வட்டாரத்தில் பெரிய ஏரியும் அதுதான். அந்தகாலத்தில் ஏழு ஏரிகள் தண்ணீர் நிரம்பி உடைந்துகொண்டதாம். அவ்வளவு தண்ணீரும் எட்டாவது ஏரியாக இருக்கும் எங்கள் ஏரிக்கு வந்து எங்கள் ஏரி தாங்கி நின்றதாம். அவ்வளவு பெருமை எங்கள் ஏரிக்கு உண்டு. ஆனால் நான் பிறந்தபிறகு அந்த ஏரி நிரம்பியதே இல்லை.

சுமார் 45 வருடங்களுக்கு முன்புஒருமுறை நிரம்பி இருக்கிறது அந்த சமயம் எங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி அனைவரும் ஆடு, மாடு, கோழிகள், பண்டம், பாத்திரம் அனைத்தையும் தூக்கிக்கொண்டு, அருகில் இருக்கும் வேறொருவர் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். எங்கள் வீடு, காடு எல்லாம் தண்ணீர் நிரம்பி இருந்ததாம். என் அப்பா அடிக்கடி சொல்வார். எனக்கு தெரிந்து 1990 வாக்கில் ஒருமுறை பாதி அளவு தண்ணீர் நின்றது. எங்கள் வீட்டு அருகில் இருக்கும் கிணறு, குட்டைகள் அனைத்தும் வயல்களுடன் சேர்ந்து ஒரே நீராக சமமாக நிரம்பி இருந்தது.

எங்கள் வீட்டு வாசலை ஒட்டியபடியே ஒரு வாய்க்கால் இருக்கிறது. அதுவும் எங்கள் வீட்டு முன்பு மட்டும்தான் இன்னும் வாய்க்கால் இருக்கிறது. வேறு இடங்களில் எல்லாம் அழித்து காட்டோடு சேர்த்து விட்டார்கள். அந்த வாய்க்காலில் மீன் குஞ்சுகள் வரும். அதனை பட்டை வைத்து பிடிப்பார்கள். பட்டை என்றால் வாய்க்காலில் இருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் வாய்க்கால் நீளத்திற்கு ஒரு பாயை சின்னதாக வெட்டி ஒட்டியிருப்பார்கள். அது சல்லடைபோல இருக்கும், தண்ணீர் அந்த பாய் வழியாக கீழே போய்விடும். அதில் வரும் மீன் குஞ்சுகள் அதைத்தாண்டி ஒரு வாழை பட்டையில் போய் விழும், அந்த பட்டையில் இருந்து துள்ளி துள்ளி அதன் முனையில் இருக்கும் ஒரு சட்டியில் போய் விழும். இரவு பட்டை போட்டால், காலையில் சென்று எடுத்து வந்து குழம்பு வைப்பார்கள். என் வீட்டின் முன்பும் நிறைய பட்டை போடுவார்கள். இது எல்லாமே 1990 களில் அதற்க்கு பிறகு அவ்வளவு மழையோ, ஏரிக்கு தண்ணீரோ வந்தது கிடையாது. அந்த சமயம் என் சித்தப்பா, என் வீட்டுக்கு முன்பு காட்டருகில் இருக்கும் ஓடையில் வலைபோட்டு மீன் பிடிப்பார். அப்பொழுது மீனோடு சேர்ந்து நிறைய தண்ணீர் பாம்புகளையும் பிடிப்பார். நாங்கள் கரையில் நின்றுகொண்டு பயத்துடன் வேடிக்கை பார்ப்போம்.

ஏரியின்  கரைமட்டுமே இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு இருக்கும். காலையில் அவனுடன்  (ஜோஷ்) வாக்கிங் போவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அவனுடன் வாக்கிங் போகும்போது எனக்கே பெருமையாக இருக்கும். அவ்வளவு கம்பீரமாக இருப்பான். அவனுடன் செல்லும்போது எதிரில் எங்களை பார்பவர்கல்கூட மரியாதையுடன் பார்ப்பார்கள். அவன் உருவம் அப்படி. அவன் 1996 ல் எனது பெரிய அண்ணன் பெங்களூர் ல் கல் உடைத்துகொண்டிருந்தார், அங்கே இருந்து அவனை எடுத்து வந்தார். பெரிய ஜாதி நாய் என்று சொல்வார்கள். குட்டியிலேயே அவ்வளவு கம்ப்பீரமாக இருக்கும். நான் அப்பொழுது 11 ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன், என்னுடனே காட்டிற்கு வரும், காட்டில் நானும் அவனும் ஒளிந்துகொண்டு விளையாடுவோம். நான் ஒரு செடியின் கீழ் படுத்துகொண்டால் அவன் என்னை கண்டுபிடிக்க துள்ளி குதித்து ஓடிவருவானே அந்த அழகே தனிதான். அவ்வளவு அழகு, கம்பீரம், என்னை கண்டுபிடிக்க துடிக்கும் பார்வை, என்னை கண்டபின் அவன் முகத்தில் தெரியும் வெற்றி களிப்பு, அப்பா அப்பப்பா
டேய் i miss you da Josh.

எங்கல் வீட்டில் எங்கள் எல்லோரையும்விட அதிகம் சாப்பிடுபவன் அவன்தான். அவனுக்கு மட்டும் சோறு போட்டு மாளாது அவ்வளவு சாப்பிடுவான். என்னுடன் இரவு நேரங்களில் காட்டுக்கு வருவான். அந்த ஏரியில் காட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமானால் இரவு 10 மணிக்கு மேல்தான் முடியும், பகல் வேளையில் ஏரியை ஒட்டியமாதிரி இருக்கும் காட்டுகாரர்களே நீர் பாச்சிகொண்டிருப்பார்கள். எங்கள் காடு கொஞ்சம் தூரம் என்பதால், இரவு 10 மணிக்குமேல் சென்று வேறு காட்டில் பாய்ந்துகொண்டிருக்கும் தண்ணீரில் சிறிதுமட்டும் திருப்பிவிட்டுவருவோம். அதுவும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் வந்து திருப்பிகொல்வார்கள். அந்த சமயங்களில் என் வீட்டிலிருந்து நான்தான் செல்வேன், அப்பொழுதெல்லாம் அவன் எனக்கு முன்பாக போய்கொண்டிருப்பான். அவனை போல் ஒரு நண்பன் சான்சே இல்ல. அதுவும் என் வாலிப வயதில் என்னுடன் இருந்த நண்பன்.

ஒரு சீக்கை  அடிப்பேன், ஜெயம் படத்தில் ரவி அடிப்பானே அதுபோல, ஆனால் அந்த படத்தை பார்த்து கற்றுக்கொள்ளவில்லை, அந்தபடமேல்லாம் அதற்க்கு பின்பு வந்தது, ஒரு அடையாலத்துக்குதான். அந்த சீக்கை கேட்டவுடன் எங்கிருந்தாலும் சரி அடுத்த நொடியில் என் முன் நிர்ப்பான்.

 பிறகு நான் திருச்சிக்கு MA படிக்க சென்றுவிட்டேன், ஒருமுறை வீட்டிற்கு வந்தபொழுது அவன் இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடாமல் உடம்பு சரியில்லாமல் இருப்பதாக என் அப்பா சொன்னார். எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் எங்கள் வீட்டிற்கு எதோ மண்வெட்டியோ, கயிறோ எடுக்கவந்தபோது அவரை கடிப்பதுபோல ரொம்ப மூர்க்கமாக குறைத்ததால், அவர் செய்வினை செய்துவிட்டார் என்றார் என் அப்பா. நான் உடனே கறி கடைக்கு சென்று 100 ரூபாய்க்கு வெறும் எலும்பு மட்டும் வாங்கிவந்து போட்டோம், அன்று மாலையே குணமானது.

ஒருமுறை என் வீட்டருகே நிறைய நாய்கள் ஒன்றுசேர்ந்து சண்டையிட்டுகொண்டன, என் பெரியப்பா வீட்டு நாய் ஓன்று இருந்தது கிட்டத்தட்ட இரண்டிக்கும் ஒரே வயதுதான். அதனை மற்ற நாய்கள் அனைத்தும் சேர்ந்து கடித்துகொண்டிருந்தன, நானும் அவனும் அப்பொழுதுதான் வயக்காட்டில் இருந்து வந்தோம், உடனே இவன் ஓடிபோய் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு நாயை அதன் கழுத்தை கவ்வி வாயாலே அதனை தூக்கி ஒரு சுத்து சுத்தி வீசினானே பார்க்கணும், அனைத்து நாய்களும் ஓடிவிட்டன. நான் பார்க்கும் எல்லோரிடமும் அதனை பெருமையாக சொல்லிகொண்டிருப்பேன்.

எனக்கு மட்டுமல்ல, என் வீட்டின் அருகில் இருக்கும் எல்லோருக்கும் அவன் பெஸ்ட் friend. எல்லோரும் அவனை அன்புடன் பழகுவார்கள். அவர்கள் வீட்டில் ஒருவன்போல். முத்து அத்தை எப்போ பார்த்தாலும் டேய் கருப்பா வாடா என்பார்கள். சரவணன், லச்சுமி அக்கா, முருகேசன் அண்ணா அனைவரும் அவனுக்கு friends. என் அம்மா அவனை டேய் சின்னவனே வாடா என்றுதான் அழைப்பார், டேய் பையா வாடா என்றுதான் என் அம்மா அழைப்பார். என் அப்பா அட கழுத வாடா இங்கன்னா என்பார்.

ஒருமுறை விவசாய காட்டுக்கு வைக்கும் எலி மருந்தை தின்றுவிட்டான். அன்று நான் கல்லூரிக்கு வேலைக்கு கிளம்பிகொண்டுருக்கிறேன். ஒரு சிறுவன் ஓடி வந்து உங்கள் நாய் சாக கிடக்கிறது எதையோ விஷத்த தின்னுடிச்சி என்று சொன்னான். உடனே நானும் சரவணனும், அப்பொழுது அவன் மட்டும்தான் வண்டி வைத்திருப்பவன், இருவரும் அவனை தூக்கிக்கொண்டு அமரகுந்தி மாட்டாஸ்பத்திரிக்கு கொண்டுபோய், அங்கே doctor விஷ முறிவு மருந்து இங்கே இல்லை, சீட்டு எழுதி தர்றேன் ஓமலூரிலோ அல்லது சேலதிலோ பொய் வாங்கிவந்தால் போட்டு பார்க்கலாம், இல்லையேல் கொண்டுபோய் புதைத்துவிடுங்கள் என்றார். உடனே நானும் சரவணனும் தாரமங்கலம், ஓமலூர், சேலம் என்று சுற்றி மதியம் 2 மணிவாக்கில் சேலத்தில் வாங்கிவந்து கொடுத்தோம். doctor போட்டுவிட்டு தூக்கி செல்லுங்கள் நிச்சயமில்லை என்றார், அதன்பிறகு வீட்டிற்கு வந்து தேறிவிட்டான். இது நடந்து 6 , 7 வருடம் இருக்கும்.

அன்று அவன் இறந்தது என்னை அதிகம் பாதித்தது. நானே அவனை எடுத்துசென்று, குழிவெட்டி அவனை மறைத்துவிட்டு வந்தேன். நெறைய இழவு வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அங்கே குழி வேட்டுவோரை பார்த்தால் எவ்வளவு உன்னதமான பணியை செய்கிறார்கள், நாமும் இதுபோல ஒரு புண்ணிய செயலை பிற்காலத்தில் செய்யவேண்டும் என்று நினைத்ததுண்டு. அந்த புண்ணிய பணியை என் நண்பனுக்கு செய்ததில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. நண்பா thank you  நண்பா.

Sunday, August 17, 2014

இரண்டு மணிநேர தியானம்

நான்
எனது மகன்
ஒரு stabler...

இரண்டு மணி நேரம்
நிர்வாண மௌனம்
ஆனந்த தியானம்...

ஒரு மொழி வார்த்தையில்லை
ஒரு மௌன பாஷையில்லை
எங்களுக்குள் அவசரமுமில்லை...

அவன் விளையாடுகிறான்
நான் ரசிக்கிறேன்
நாங்கள் தியானிக்கிறோம்....

அவன் ஆனந்தம் செய்கிறான்
நான் தரிசிக்கிறேன்
ஒரு நடராஜரையும்,, ஒரு ரசிகனையும்போல....

நான் நாற்காலியில்
நாவல் படித்துகொண்டு
இல்லை இல்லை சுவாசித்துக்கொண்டு....

stabler,
ஒரு வண்டியாக,
ஒரு கூடையாக
சறுக்கு வண்டியாக

பறக்கும் பூச்சியாக
பொம்மைகளை தூக்கும் இடுக்கியாக
பென்சில் வைக்கும் பெட்டியாக

கன்னம் தடவி பார்க்கும் தகடாக
கண்ணாடியாக
அவனது கைகளில்....

அவன்
தியானம் செய்வதுபோல்
தன்னிலை மறந்திருந்தான்...

அவன் இருந்த வீடு
அறை
அருகில் இருந்த பொருள்கள்
அப்பா அம்மா
அனைத்தும் மறந்திருந்தான்.

அவன்
விளையாட்டு எனும்
தியானத்தில்..

(இரண்டு மணிநேரமும்)

நான்
ரசித்தல் எனும்
தியானத்தில்... 

விளையாட்டைகூட தியானமாக
ரசித்தளைகூட தியானமாக
நாங்கள் தியானித்தோம்...

வாழ்வே தியானம்
வாழ்வதே தியானம்
தியானத்தை தியாணிப்போம்....