நான் தர்மபுரிக்கு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். பேருந்து தொப்பூர் மலை வழியாக சென்றுகொண்டிருந்தது. பேருந்து மெதுவாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. எப்பொழுதுமே தொப்பூர் மலைப்பாதையில் அதிகம் விபத்துக்கள் நடப்பதுண்டு. இந்த ஏரியாவிலேயே விபத்திற்கு பேர் போன இடம் தொப்பூர். பேருந்துகள் மலை ஏறும்போதும் சரி இறங்கும்போதும் சரி, மெதுவாக அட்டைப்பூச்சி ஊர்வதுபோல ஊர்ந்துசெல்லும். அன்று நான் பேருந்து தனியார் பேருந்து, எனவே வேகமாக (அதிகபட்சமாக 15 கிலோமீட்டர் வேகம் இருக்கும்) மலை ஏறியது. அப்பொழுது ஒரு லாரியை முந்தி சென்றது. அந்த சமயம் ஒரு கனரக வாகணம் ஊர்ந்து செண்றது. அதன் ஓட்டுர், பாவம் அவரை பபார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஒரு கையில் பீடி, ஒரு கையில் ஷ்டேரிங். முகத்தில் அப்படி ஒரு களைப்பு, பபாதி தூக்கம், ஏதோ வாழ்க்கையில் அடிபட்ட ஒரு வடு. அவ்வளவும் தெரிந்தது. வயது 50ஐ தான்டியிருபார்.
அதன்பிறகு எந்தஒரு ட்ரைவரை பார்தாலும் குடும்பத்திற்காக அவர் படும் உழைப்பே கண்முண் தெரிகிறது. அவர்மேல் ஒரு மரியாதை பிறக்கிறது.
அதன்பிறகு எந்தஒரு ட்ரைவரை பார்தாலும் குடும்பத்திற்காக அவர் படும் உழைப்பே கண்முண் தெரிகிறது. அவர்மேல் ஒரு மரியாதை பிறக்கிறது.
No comments:
Post a Comment