visitors

Sunday, August 17, 2014

இரண்டு மணிநேர தியானம்

நான்
எனது மகன்
ஒரு stabler...

இரண்டு மணி நேரம்
நிர்வாண மௌனம்
ஆனந்த தியானம்...

ஒரு மொழி வார்த்தையில்லை
ஒரு மௌன பாஷையில்லை
எங்களுக்குள் அவசரமுமில்லை...

அவன் விளையாடுகிறான்
நான் ரசிக்கிறேன்
நாங்கள் தியானிக்கிறோம்....

அவன் ஆனந்தம் செய்கிறான்
நான் தரிசிக்கிறேன்
ஒரு நடராஜரையும்,, ஒரு ரசிகனையும்போல....

நான் நாற்காலியில்
நாவல் படித்துகொண்டு
இல்லை இல்லை சுவாசித்துக்கொண்டு....

stabler,
ஒரு வண்டியாக,
ஒரு கூடையாக
சறுக்கு வண்டியாக

பறக்கும் பூச்சியாக
பொம்மைகளை தூக்கும் இடுக்கியாக
பென்சில் வைக்கும் பெட்டியாக

கன்னம் தடவி பார்க்கும் தகடாக
கண்ணாடியாக
அவனது கைகளில்....

அவன்
தியானம் செய்வதுபோல்
தன்னிலை மறந்திருந்தான்...

அவன் இருந்த வீடு
அறை
அருகில் இருந்த பொருள்கள்
அப்பா அம்மா
அனைத்தும் மறந்திருந்தான்.

அவன்
விளையாட்டு எனும்
தியானத்தில்..

(இரண்டு மணிநேரமும்)

நான்
ரசித்தல் எனும்
தியானத்தில்... 

விளையாட்டைகூட தியானமாக
ரசித்தளைகூட தியானமாக
நாங்கள் தியானித்தோம்...

வாழ்வே தியானம்
வாழ்வதே தியானம்
தியானத்தை தியாணிப்போம்....

No comments:

Post a Comment