visitors

Saturday, November 19, 2011

கடமை

நேற்று ஒரு டீ கடையில் அமர்ந்து பேப்பர் படித்துகொண்டிருந்தேன் அப்பொழுது டிவியில் ஒரு சிவாஜி பாடல் ஒலித்துகொண்டிருந்தது, பாடலை சரியாக கவனிக்கவில்லை, அதன் இரண்டு வரிகள் என்னை அதிகமாக பாதித்தன, அவை

 "காலில் விலங்கு இட்டோம்,
அதை
கடமை என அழைத்தோம்"

அந்த இரண்டுவரிகளை கேட்ட பின்பு அந்தப்பாடலை கவனித்தேன் அது "மனிதன் நினைபதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ..." என்ற பாடல். அந்த பாடல் முக்கியமாக படவில்லை, அந்த இரண்டு வரிகள்... சான்சே இல்லை, அந்த இரண்டு வரிகளுக்கு விளக்கம் தெரிந்துவிட்டால் மனிதனுக்கு வாழ்கையில் பிரச்சனயே  இருக்காது.

ஆம் கடமை என்ற பெயரில் நாம்தான் நம் கால்களுக்கு விலங்கு போட்டுகொல்ல்கிறோம், யார் கட்டளையிட்டார்கள் பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டும் என்று, யார் கட்டளையிட்டார்கள் பெரிய வீடு வேண்டும் என்று, யார் கட்டளையிட்டார்கள் லோன் வாங்கவேண்டும் என்று, நாம் நினைக்கும் அணைத்து கடமைகளுமே நாமாகவே இட்டுக்கொண்ட விலங்குகள், பிறகு நாமே அலுத்துகொள்வோம்.... அவை இரண்டும் வாழ்வின் முக்கியமான வரிகள்.

No comments:

Post a Comment