visitors

Wednesday, May 14, 2014

மரம் வளப்போம்- கவிதை

 ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்
அந்த மரத்தை வெட்டுமுன்

இரை தேடிச் சென்ற பறவை
வீடு திரும்பும் வரையேனும்
பொறுத்திருக்கலாம் வெட்டாமல்.

கூடிருக்கிறதா ?
கூட்டினுள் குஞ்சிருக்கிறதா ?
சற்றேனும் கவனித்திருக்கலாம்.

நாளை பூத்திடக் காத்திருக்கும்
மொட்டிதழ் விரியும் வரையேனும்
பொறுத்திருக்கலாம்

சொல்லியனுப்பியிருந்தால்

மலர்வளையம் வைக்கவாவது வரும்
தினமும் தேனருந்தும் தேனீ.

பருவமழையின் முதல் துளிகள்
பெரும்பாலும் கண்ணீர்த் துளிகலாகவே

தொலைந்த மரங்களின் நினைவுகளோடு !





தி இந்து நாளிதழில் வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்.

No comments:

Post a Comment