visitors

Sunday, August 17, 2014

நீர்க்குமிழிகள்

நீரின் ஓட்டத்தில்
சில மூலக்கூறுகள்
ஓன்று சேர்ந்து
குமிழிகளாக...

ஆனால்
அடுத்த நொடியில்
மூலக்கூறுகள் அடங்கி
மீண்டும் நீரின் ஓட்டத்தில்
துளியாக.....

இதில் யார் பெரியவர்
பெரிய மனிதன்
தலைவன்
கலகக்காரன்....

வாழ்க்கை ஓட்டத்தில்
துளிகளா
குமிழ்களா?

1 comment: