இன்று என் சக ஆசிரியர் ஒருவருடன் ரொம்ப ஆத்மார்த்தமாக பேசிக்கொண்டிருந்தேன். ரஜினிகாந்த் ன் பாபா படத்தில் ஒரு வசனம் வரும். மனைவி, குழந்தை,மாமன் மச்சான் என உறவில் வேவதைவிட ஒரு கட்டு விரவில் வெந்துவிடலாம் என்று. அந்த ஆசிரியர் சென்ற பிறகு நான் ஆழ்ந்த யோசனையில் இருந்தேன். அந்த வரிகள் என்னை ஆழமாக யோசிக்க வைத்தன. நாம் பூமியில் பிறந்தபோது நாம் கொண்டுவந்தது என்ன. நாம் இறந்தபின்பு கொண்டுசெல்வது என்ன என்பதுதான்.
உண்மையில் நாம் பிறக்கும்போது நம்மிடம் கொடுக்கப்பட்டது நம் ஆயுள் மட்டுமே. அதனை செலவழித்துவிட்டு நாம் மறுபடியும் மறைந்துவிடவேண்டும் என்பதே இயற்க்கை நமக்கு விட்ட கட்டளை.
பிறப்பு என்பது ஒரு மாய சடங்கு. நாம் ஒரு பெண்ணின் கருவில் உருவாவது முதல் கருவில் வளர்வது, பிறப்பது அனைத்துமே ஒரு மாய நிகழ்வே. இவை அனைத்துமே பொய். ஏனென்றால் பத்து மாதத்திற்கு முன்புவரை ஒரு ஜீவன் தோன்றும் என்பது யாருக்குமே தெரியாது. பத்து மாதத்திற்கு முன்புவரை ஒரு ஜீவன் என்பதும், ஆத்மா என்பதும் பொய் , போலி என்பதைவிட "இல்லை" என்பதே உண்மை. ஒரு ஆத்மா என்பதே இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இயற்க்கைக்கு பத்துமாதம் என்பது ஒரு கால அளவேயில்லை. ஒரு மனிதனுக்கு கண் இமைக்கும் நேரத்தில் என்ன என்ன நடந்தது என்று தெரியாதோ அதுபோலவே இயற்கைக்கும் அந்த பத்து மாதத்தில் என்ன நடந்தது என்றே தெரியாது. இன்னும் சொல்லப்போனால், மனிதனின் கண் இமைக்கும் நேரத்தைவிட மிக மிக மிக மிக மிக ........................ குறைவானதே அந்த இயற்கையின் பத்து மாதங்கள்.ஆக ஒரு ஜீவன் என்பது எப்பொழுதுமே இல்லை என்பதே உண்மை. இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் மனிதனுக்கு பிறப்பு என்பதுகூட இல்லை.
அதுபோலவே இறப்பு என்பதும் ஒரு சடங்கே. நம் உடல்விட்டு உயிர்பிரிவதும், பின்பு உடலை எடுத்துசென்று புதைப்பதும், எரிப்பதும் ஒரு மாய சடங்கே. சில காலம் நம் நினைவுகள் இந்த பூமியில் இருக்கலாம். அது நம் வாழ்வு ஏற்படுத்திய தாக்கம். அதைபோருத்தே நம்மைப்பற்றி நினைத்திருக்கும் காலங்கள் (திருவள்ளுவர், டார்வின், சக்க்ரடிஸ், காந்தி, ஹிட்லர், mgr போல). அந்த தாக்கம்தான் நினைவுகள். அது ஒவொருவரும் வாழ்ந்த வாழ்க்கையை பொறுத்தது. அதுவும் விரைவில் அழிந்துபோகும். இன்னும்சொல்லப்போனால் மறைந்துபோகும். அது பூமியில் ஒரு மழை ஏற்படுத்திய தாக்கத்தை போன்றது அவ்வளவே.
ஒரு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படலாம். மழையும் பெய்யலாம், மழை நின்றுபோகலாம், அதன் தாக்கம் இந்த பூமியில் கொஞ்சநேரம் (மனித நினைவுகளை போல) இருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து அந்த குறிப்பிட்ட மழையை நினைவுகூறசொன்னால். யாருக்குமே தெரியாது. இதுதான் வாழ்க்கை. மழை என்ன கொண்டுவந்தது என்ன கொண்டுசென்றது அதற்கு தெரியாது. அதுபோலதான் வாழ்க்கை.
மனிதன் பிறக்கும்போது அவன் கொண்டுவந்தது அவனது ஆயுள் மட்டும்தான். இன்னும் புரியும்படிசொல்லப்போனால் "சில மணித்துளிகள்" மட்டுமே. அதனை கொஞ்சம் கொஞ்சமாக செலவழிக்கவேண்டும், அதுவே இயற்கையின் கட்டளை, அது தீர்ந்துபோனவுடன் நீயும் தீர்ந்து போய்விடவேண்டும், இதுவே சட்டம்.
சமுதாயம், உறவினர், குடும்பம், மனைவி, மக்கள் எல்லாம் அந்த மணித்துளிகளை செலவிடும்போது ஆடிதள்ளுபடிபோல உனக்கு கிடைக்கும் extra offers. அதன்மூலம் உனக்கு கிடைக்கும் பாசம், அன்பு, மகிழ்ச்சி, துரோகம், இன்னபிற அனைத்தும் அதுபோலவே (ஆடிதள்ளுபடியில் உனக்கே தெரியாமல் சிலபேர் ஆட்டையும் போடுவார்களே அதுபோல).
அது அவர்களுக்கு (உறவினர், மனைவி மற்றும் மக்களுக்கு) உன்னுடையதைபோலவே "ஒரு வாழ்க்கை".
மறைமுகமாக பார்த்தோமானால் ஓன்று மட்டுமே உண்மை, ஒவ்வொரு நொடியும் நீ வாழவேண்டும். அவ்வளவே. நீ ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருந்தாலும் உன் வாழ்நாள் ஒருநாள் முற்றுபெறும். அதற்க்கு நீ தேவையே இல்லை.
நன்றி.
அன்புடன் சிவகிரி.
(நான் தொடர்ந்து எழுத ஊக்கமளிக்கும் என் அன்பு மாணவன் ஞானவேல் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.)

புத்தன் கண்டடைந்த பெரும் தரிசனங்களில் அடிப்படையானது நீங்கள் குறிபிடுவது.
ReplyDeleteநாம் காண்பது எல்லாமே பொருள்கள் அல்ல வெறும் கால அடிப்படையிலான நிகழ்வுகள் என்று. உதாரணமாக ஏதோ காரணமாக ஓரிடத்தில் கூட்டம் கூடுகிறது, கூட்டம் என்பது பொருளல்ல நிகழ்வு மட்டுமே, அப்படியானால் மனிதன் பொருள்தானே ? இல்லை உடலின் உறுப்புகள் சிலகாலம் கூடியிருக்கும்
நிகழ்வு. உறுப்புக்கள் என்பதும் கூட மூலகூறுகளின் தற்காலிக கூடல் நிகழ்வே. மலையும் கடலும் எல்லாம் நிகழ்வே, ஆனால் நம் ஆயுளோடு ஒப்பிடுகையில்
சற்று நீண்ட நிகழ்வு என்கிறான்.
இந்த தாகத்தினால்நான் எழுதிய கவிதை ஒன்றை உங்கள் பார்வைக்கு இடுகிறேன்.
http://sozhagakkondal.blogspot.fi/2014/07/blog-post_24.html
நான் வழிகாட்டியாக என்றென்றும் நினைக்கும் ஆசான் நீங்கள், உங்கள் அன்பை பெரும் மாணவனாக இருப்பது எனது ஊழ்வினையின் பயன்.
உங்கள் ஆசியை என்றும் வேண்டும்
ஞானவேல்